ஏறாவூர் நிருபர்)ஏஎம் றிகாஸ் -
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் சட்டவிதிகள் தொடர்பாக வேட்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை பொலிஸ் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
இத்திட்டத்தின்கீழ் ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்குதேர்தல் சட்டம் தொடர்பாக அறிவூட்டும் மாநாடு ஏறாவூர்- அலிகார் தேசிய பாடசாலை மண்டபத்தில் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் சிந்தக்க பீரிஸ் தலைமையில் நடைபெற்றது.
இம்முறை ஏறாவூர் நகர சபைக்காக 9 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேச்சைக்குழுவும் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபைக்காக 10 கட்சிகளும் ஒரு சுயேச்சைக்குழுவும் போட்டியிடுகின்றன. இக்குழுக்களின் வேட்பாளர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இத்தேர்தலுக்கான பிரசார காலத்திலும் வாக்களிப்பு தினத்தன்றும் மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னரும் வேட்பாளர்களும் வாக்காளர்களும் பின்பற்றவேண்டிய சட்டம் ஒழுங்குகள் குறித்து இம்மாநாட்டில் விளக்கமளிக்கப்பட்டது. தேர்தல் சட்டதிட்டங்களை மீறுவோறுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இங்கு அறிவிக்கப்பட்டது.