வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளி வாசல் புதிய நம்பிக்கையாளர்களுக்கான நியமனக் கடிதம் 19.12.2017ம் திகதி காலை 9.00 மணிக்கு வாழைச்சேனை கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலகத்தில் வைத்து பள்ளி வாசல் முஸ்லிம் தரும நம்பிக்கைச் சொத்து பணிப்பாளரினால் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளி வாசலில் 24.12.2017ம் திகதி இஸாத் தொழுகையினைத் தொடர்ந்து புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.இத்தெரிவின் போது
செயலாளராக பி.எம்.இஸ்மாயில் JP அவர்கள் தெரிவு செய்யப்பட்டார் மேலும் தலைவராக எம்.எச்.மீரா முகைதீன் JP அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். பொருளாளராக எம்.யு.சம்சுதீன் அவர்களும் உப செயலாளராக ஏ.எல்.எம்.லியாப்தீன் JP அவர்களும் உப தலைவராக எச்.எம்.அப்துல் ஹசன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.





