பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி..

மாதானத்தின் குமாரர் என அழைக்கப்படும் இயேசுநாதரின் பிறப்பு நிகழ்ந்த நத்தார் தினத்தைக் கொண்டாடும் நாம் சமாதானத்தின் ஊடாகவே இந்த கிறிஸ்துமஸ் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்க முடியும் என,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கும் பரந்து வாழும் கிறிஸ்தவ மக்களால் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிறிஸ்துமஸ் தின வாழ்த்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமாதானம் மற்றும் அன்பின் சுபசெய்தியுடன் தேவ புத்திரர் இயேசுநாதர் பிறந்தமையைக் கொண்டாடும் நத்தார் தினம் கிறிஸ்தவ மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடும் ஓர் சமய வைபவமாகும். தற்போது அது கிறிஸ்தவர்கள் மாத்திரமன்றி இன, மத பேதமின்றி பெரும்பாலான உலக மக்கள் கொண்டாடும் கலாசார நிகழ்வாகவும் மாறியுள்ளது.

இன, மத பேதங்களைத் தாண்டிய, சமாதானம், நல்லிணக்கம் மிகுந்த, நற்பண்புகள் நிறைந்த, சிறந்த சூழலொன்றையும் சட்டம், சமாதானம், நீதி என்பன ஆதிக்கம் செலுத்தும் சிறப்பானதோர் தேசத்தையுமே இன்று எமது சமூகமும் வேண்டி நிற்கிறது.

சமாதானத்தின் குமாரர் என அழைக்கப்படும் இயேசுநாதரின் பிறப்பு நிகழ்ந்த நத்தார் தினத்தைக் கொண்டாடும் நாம் சமாதானத்தின் ஊடாகவே இந்த நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்க முடியும். உங்கள் அனைவருக்கும் எழில்மிகு மற்றும் அர்த்தம் பொருந்திய நத்தார் தினமாக அமைய வேண்டுமென என வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -