நோட்டன் பிரிட்ஜ் நிருபர்-
மில்கே பால் சபையினால் நானுஓயா பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பால் சேகரிப்பு மத்திய நிலையம் திறப்பு விழா நிகழ்வு 22.12.2017 காலை இடம்பெற்றது
தேசிய கால்நடை வளர்ப்பு சபையினால் நிர்மாணிக்கப்பட்ட பால் சேகரிப்பு மத்திய நிலைய திறப்பு விழா நிகழ்வில் தேசிய கால் நடை வளர்ப்பு சபையின் உப தலைவர் பாலித்தசமரகோன் செயற்பாட்டாளர் டியூடன் அமரசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர் கடந்த காலங்களில் சேகரிக்கப்படும் பால் ராகலை பால் சேகரிப்பு மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது
இந் நிலையில் தலவாக்கலை நானுஓயா பகுதி பால் சேகரிப்பாளர்களின் நலன் கருதி புதிய மத்திய நிலையம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது



