ரஷ்யா பயணமாகும் தேயிலை ஆராய்ச்சி விசேட குழு...




நோட்டன் பிரிட்ஜ் நிருபர்-

ஷ்யா நாட்டில் இலங்கை தேயிலை தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கையிலிருந்து விசேட குழுவொன்று ரஷ்யா பயணமாகவுள்ளதாக தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய தலைவர் கலாநிதி ஜெயந்த கவரம்மான தெரிவித்தார்.

ரஷ்யா நாட்டினால் இலங்கை தேயிலைக்கு ஏற்பட்டுள்ள தடை தொடர்பில் தேயிலை சிறுபோக உற்பத்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தலாவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய கேட்போர் கூடத்தில் 22.12.2017 இடம்பெற்ற கலந்துரையாடலின் ரஷ்ய நாட்டிற்கு 18 ஆயிரம் மெட்ரிக்டொன் தேயிலை தூல் தாங்கியில் வண்டினம் ஒன்று இருந்ததையிட்டு தற்காளிக தடையை ரஷ்யா விதித்துள்ளது.

இந் நிலையில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் நவீன் திசாநாயக்க ஆகியோரின் ஆலோனைக்கமைய விசேட குழுவென்று எதிர்வரும் 25 ம் திகதி பயணமாகவுள்ளனர் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரி கலாநிதி கீர்த்தி மோட்டி உட்பட ஆய்வு குழுவொன்று பயணமாகவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -