பூநொச்சிமுனை கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் தளபாடங்கள் வழங்கி வைப்பு



எம்.ரீ. ஹைதர் அலி-

பூநொச்சிமுனை கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் தளபாடங்கள் வழங்கி வைப்பு.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கினால் பூநொச்சிமுனை கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன.

பின்தங்கிய எல்லைக்கிராமமான பூநொச்சிமுனை பிரதேசத்தில் சமூகசேவை சார்ந்த பல்வேறுபட்ட செயற்பாடுகளை மிகச் சிறந்த முறையில் முன்னெடுத்துவரும் பூநொச்சிமுனை கிராம அபிவிருத்தி சங்கத்தினர் தமது சங்கத்திற்கான தளபாட பற்றாக்குறை மற்றும் போதியளவான வருமானங்கள் இன்மை காரணமாக தங்களது செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்தனர்.

இதனைத்தொடர்ந்து தமது சங்கத்திற்கான கதிரைகளை பெற்றுக்கொடுப்பதனூடாக தமது செயற்பாடுகளை சிறந்த விதத்தில் முன்னெடுப்பற்கும் கதிரைகளை வாடகைக்கு வழங்கி தமது சங்கத்தின் செயற்பாடுகளுக்கான மேலதிக வருமானத்தினை ஈட்டிக்கொள்வதற்கும் உதவுமாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் விடுத்த வேண்டுகோளிற்கு அமைவாக தனது 2017ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து 50000 ரூபாய் பெறுமதியான கதிரைகளை 2017.12.08ஆம்திகதி வழங்கி வைத்தார்.

எல்லைப்புற பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிவாயல்கள், விளையாட்டுக் கழகங்கள், சமூக சேவை நிறுவனங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் உள்ளிட்ட பொது நிறுவங்களை வளப்படுத்தும் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -