அம்பாரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பசளை தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கிஇ அந்த பிரதேச விவசாயிகளுக்கு போதியளவு பசளையை அனுப்பி வைக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன்இ விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்றுஇ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
விவசாயத்துக்கு தேவையான போதியளவு பசளையை அனுப்பி வைக்குமாறு அமைச்சர் துமிந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அம்பாரை மாவட்ட விவசாயிகளின் கமத்தொழில் நடவடிக்கைகளுக்கு தேவையான யூரியா பசளையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையினால்இ அந்தப் பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடியை உடனடியாகத் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்குமாறுஇ பொத்துவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்இ அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான எஸ்.எஸ்.பி.மஜீத்இ அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தார்.
பொத்துவில் பிரதேசத்தில் பசளைத் தட்டுப்பாடு பெருமளவு இருப்பதாகஇ அவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் சுட்டிக்காட்டியதை அடுத்தேஇ அமைச்சர் ரிஷாட் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.