லோகி தோட்ட காணி வெளியார் ஆக்கிரமிப்புக்கு எதிர்த்து நுவரெலியா தலவாக்கலை வீதியில் பாரிய ஆர்பாட்டம்






மு.இராமச்சந்திரன்-
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொகி தோட்டத்திற்கு சொந்தமான காணியை வெளியார் ஆக்கிரமிப்பு செய்கின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அத்தோட்ட மக்கள் ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்

தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியின் லோகி தோட்டத்திற்கருகிலே 04.12.2017 காலை 8.30 மணியளவில் வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதான வீதியின் ஒரத்திலுள்ள லோகி தோட்டத்திற்கு சொந்தமான காணியை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கம்பிவேளி நாட்டிய நிலையில் அதனை உடைத்து எரிந்த தோட்ட மக்கள் எதிப்பு ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர் மேலும் குறித்த நிலப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடையை அகற்றக்கோரியும் தோட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

ஆர்பாட்டத்தில்100 மேற்பட்டோர் கலந்துகொண்டதுடன் எங்க நிலம் எங்களுகே சொந்தம் கடையை அகற்று போன்ற எதிப்பு வாசகங்கள் ஏந்திபவண்ணம் இடம்பெற்ற ஆர்பாட்டத்தினால் நுவரெலியா அட்டன் பிரதான வீதி 1 மணித்தியாலங்கள் வரை தடைப்பட்டது சம்பவயிட்டத்திற்கு லிந்துலை பொலிஸார் வருகைந்து காணி அபகரிப்பு தொடர்பில் விசாரணையை முன்னெடுப்பதாக தெரிவித்ததையடுத்து ஆர்பாட்டம்கைவிடப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -