க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! நுவரெலியா மாவட்டத்தில் மாணவன் முதலிடம்!




க.கிஷாந்தன்-
வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவன், பௌதீக விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் ஒன்பதாவது இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இராகலை – ஹல்கரனோயா பகுதியை வசிப்பிடமாகவும், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் அ.திஷாந்தன் என்ற மாணவனே 3ஏ என்ற பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார். மேலும் அகில இலங்கை ரீதியில் 9ம் இடத்தினை பெற்றுள்ளார்.
இவர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.
அருள்மொழிவர்மன், உமா தம்பதியரின் புதல்வனான இவரை, அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -