இலங்கைப் பொருட்களுக்கு ரஸ்யா விதித்த தடையை நீக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

லங்கையின் தேயிலை மற்றும் விவசாயப் பொருட்களுக்கு ரஷ்யாவினால் விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, அந்த நாட்டுப் ஜனாதிபதியிடம் கோரவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹப்புத்தலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைகளில், ஒருவகை பூச்சியினம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையின் தேயிலை உள்ளிட்ட விவசாயப் பொருட்களுக்கு ரஷ்யாவினால் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -