கல்முனை மாநகரசபைக்கு த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்கள் தெரிவு நிறைவு!



ல்முனை 12ஆம் வட்டாரத்திற்கு ஊர்கூடி வேட்பாளர் ராஜன் தெரிவு!
காரைதீவ நிருபர் சகா

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட தமிழத்தேசியக்கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தெரிவு பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாகத் தெரிகிறது.

கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் தமிழ்த்தரப்பில் 7வட்டாரங்களுடாக 8உறுப்பினர்கள் வட்டாரமுறையில் தெரிவுசெய்யப்படவுள்ளனர். கல்முனை 12ஆம் வட்டாரம் ஒரு இரட்டை அங்கத்தவர் வட்டாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏலவே வேட்பாளர் தெரிவில் இழுபறி நிலை இருந்தபோதிலும் இறுதியில் ரெலோ மற்றும் தமிழரசுக்கட்சியினர் தலா 4உறுப்பினர்களை வழங்க இணக்கம் தெரிவித்தனர். அதற்கிணங்க 8உறுப்பினர்கள் இருகட்சிகளிலுமிருந்தும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இங்கு எதிர்க்கட்சித்தலைவர் வேட்பாளராக 11ஆம் வட்டாரத்தில் ரெலோவின் உபதலைவரும் முன்னாள் கல்முனை மாநகரசபை எதிர்க்கட்சித்தலைவருமான ஹென்றிமகேந்திரன் போட்டியிடுகின்றார்.
த.தே.கூட்டமைப்புசார்பாக கல்முனை மாகநரசபையின் முன்னாள் உறுப்பினர்களில் ஆக பாண்டிருப்பைச்சேர்ந்த அ.விஜயரெத்தினம் மட்டுமே வேட்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அந்த 7தமிழ் வட்டாரங்களுள் 6வட்டாரங்களுக்கான வேட்பாளர் தெரிவை அந்தந்த வட்டாரத்திலுள்ள ஆலயங்கள் பொதுஅமைப்புகள் இணைந்து வேட்பாளர் பெயரை கல்முனைக்கான த.தே.கூட்டமைப்பு இணைப்பாளர் னெஹன்றிமகேந்திரனிடம் ஒப்படைத்துள்ளனர்.

12ஆம் வட்டாரத்தெரிவு ஊர்கூடித் தெரிவு!
ஆனால் கல்முனை 12ஆம் இரட்டை அங்கத்தவர் வட்டாரத்திற்கான வேட்பாளர் தெரிவு ஊர்கூடி முடிவெடுக்கப்பட்டன.
12ஆம் வட்டாரத்தின் இளைஞர் அணியினர் இவ் ஊர்ப்பொதுக்கூட்டத்தை நேற்று கூட்டினர்.
கல்முனை 2 பல்தேவைக்கட்டத்தில் இக்கூட்டம் நடைபெற்றபோது கிராமஅபிவிருத்திச்சங்கத்தினர் விளையாட்டுக்கழகங்கள் மற்றும் பொதுநல அமைப்பகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என ஏகப்பட்ட மக்கள் கூடி வேட்பாளரைத்தெரிந்தனர்.

அங்கு நடராஜா ரமேஸ் மற்றும் ராஜன் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. இறுதியில் கல்முனையின் பிரபல சமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜன் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

அநேகமாக இன்று(20) புதன்கிழமை த.தே.கூட்மைப்பின் வேட்புமனுத்தாக்கல் செய்யப்படலாம் என இணைப்பாளர் ஹென்றிமகேந்திரன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -