மடவளையினை பிறப்பிடமாகக் கொண்ட அவர், அதிபர் A.K லஹார்தீன் மற்றும் ஆசிரியை A.F.S. ஸவாஹிரா ஆகியோரின் புதல்வராவார். 19.10.1992 ஆம் திகதி பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை மடவளை மதீனா தேசிய பாடசாலையில் பயின்றதோடு க.பொ.த. உயர் தரத்தினை கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியிலும் தொடர்ந்தார்.
பாடசாலைக் கல்வியோடு பல இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் திறமையை வெளிப்படுத்திய அவர் 2011 ஆம் ஆண்டிற்கான இஸ்லாமிய எழுத்தாளர் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட சர்வதேச போட்டிகளில் சிறந்த கவிஞருக்கான விருதினையும் பெற்றுக்கொண்டார். மேலும் 2011 ஆம் ஆண்டிற்கான MTV சிறந்த ஆங்கில மொழி மூல விவாதி எனும் விருதினைப் பெற்றுக்கொண்ட அவர் இந்தியாவில் லக்னோ நகரத்தில் இடம்பெற்ற சர்வதேச விவாத போட்டியில் சிறந்த விவாத அணியின் தலைவருக்கான விருதினையும் 2011 ஆம் ஆண்டு சுவீகரித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற இளைஞர் வழுவூட்டல் நிகழ்ச்சியின் மூலம் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தில் அறிமுகமான அவர், 2009 ஆம் இயக்கத்தின் மடவளை கிளையின் அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டார். 2015 தொடக்கம் 2017 வரை இயக்கத்தின் நிறைவேற்றுச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 2016 ஆம் ஆண்டு கண்டி மாவட்டத் தலைவராகவும் 2017 ஆம் ஆண்டு ஊடகப் பகுதிக்கான பொறுப்பாளரகவும் கடமையாற்றியதோடு இன்று 38 வருட வரலாற்றினைக் கொண்ட இலங்கையின் முன்னணி மாணவ இளைஞர் இயக்கத்தின் தலைவராக உயர்ந்துள்ளார்.
மேலும் வொல்வர்ஹெம்டன் பிர்த்தானியப் பல்கலைக்கழகத்தின் வியாபார நிர்வாக முதுமானியான இவர் தற்போது கண்டி BCAS Campus இன் வியாபார முகாமைத்துவ விரிவுரையாளராகவும், பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொதுச்செயலாளர்
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்.
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்.