கிண்ணியா நகர சபையின் விஷேட ஆணையாளரும், செயலாளருமாகிய என்.எம்.நெளபீஸ் அவர்களின் தலைமையில் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் கிண்ணியா நகர சபையின் கீழ் இயங்கும் ஆலங்கேணி பாலர் பாடசாலை மாணவர்களின் பிரியாவிடை வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் நகர சபையின் நிருவாக உத்தியோகத்தர், சனசமூக அபிவிருத்தி உத்தியோகனத்தர் எம்.கே. பஸீர் அவர்களும், நூலகர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தினர்.
செயலாளர் அவர்களின் உரையில் ஒவ்வொரு மாணவர்களும் திறம்பட செயற்படுத்துவதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள், அவர்களின் சிறப்பான பங்களிப்பினை செய்தள்ளார்கள். ஏனெனில் இங்கு மாணவர்கள் மும் மொழியிலும் தங்களது நிகழ்ச்சிகளை அரங்கேற்றியது சிறப்பபிப்பதாக இருந்ததது. என்று தனது உரையில் கூறியிருந்தார்.
குறித்த பாலர் பாடசாலையின் கல்வித் தரத்தினை எதிர்காலத்தில் மேம்படச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து மாணவர்களுக்கான அன்பளிப்பு பொதியும் வழங்கப்பட்டு அவர்கள் 2018 ஆம் ஆண்டு முதலாம் கல்வியாண்டை தொடர்வதற்கு வாழ்த்தி விடுகை பெற்றனர்.
இதனை தொடர்ந்து மாணவர்களுக்கான அன்பளிப்பு பொதியும் வழங்கப்பட்டு அவர்கள் 2018 ஆம் ஆண்டு முதலாம் கல்வியாண்டை தொடர்வதற்கு வாழ்த்தி விடுகை பெற்றனர்.


