கொழும்பு, புத்தளத்தில் உப மேயரை கோரும் றிசாத்

கொழும்பு, புத்தளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாநகர மற்றும் நகர சபைகளின் உப பதவிகள் தமக்கு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இதுதொடர்பில் சிறிகொத்தவில் வைத்து அமைச்சர் றிசாத் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டதாக அறியக்கிடைத்தது. எனினும் இதுதொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து சாதகமான பதிலை பெற்றுக்கொள்ள றிசாத் பதியுதீன் தொடர்ந்து முயற்சிப்பதாகவும் அறியவருகிறது.

அதேவேளை கொழும்பில் ரோசி சேநாயக்கா மேயரானால் தனது ஆதரவாளர் ஒருவரை பிரதி மேயராக்க சுஜீவ சேனசிங்கவும், முஜீபுர் ரஹ்மான் தமக்கு சார்பான முஸ்லிம் ஒருவரை பிரதி மேயராக்க முயற்சிப்பதாகவும் மேலும் அறியவருகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -