இன்று நாட்டின் அரசியலைப் பார்க்கும் போது புலப்படுவது, சிலர் மகா சங்கத்தை தமது சொந்த அரசியல் நலன்களைப் பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்துவதாகும். இதை எமது தேரர்கள் மூலமாக தமது கட்சிகளுக்கு ஆதரவு தேடிக்கொள்வதற்காகப் பாவிக்கின்றனர்.நாட்டினது பிரிவெனா கல்விக்காக இவர்கள் செய்தது மிகவும் அரியதாகும்.
இது போன்ற விடயங்களில் நாம் அரசியல் கதைக்காவிட்டாலும், நாங்கள் கட்சி என்ற வகையில் செய்தவற்றைக் கதைக்காவிட்டால், நாம் எதையும் செய்யாதவர்கள் என்று கருதப்படுவோம். விகாரைகள் மூலமாக நடாத்தப்பட்ட பிரிவெனாக்கள், அரசின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர், ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டு பிரிவெனாக்களை உயர்ந்த மட்டத்துக்கு இட்டுச் சென்றது ஜே.ஆர்.ஜயவர்தன யுகத்திலாகும்.
இன்றைய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் பிரதமர் கல்வியமைச்சருக்கு ஆலோசனை வழங்கியது பிரிவெனாக்களுக்கு வழங்குகின்ற நிதியை அதிகரிக்குமாறு ஆகும். ரூபா 750 ஆக இருந்த கொடுப்பனவு இன்று ரூபா 5000 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. விகாரைகளை மேம்படுத்துவதற்கு, பிரிவெனா கல்வியை வளர்ப்பதற்கு, நாங்கள் கட்சி, பேதம் பார்ப்பதில்லை" என்று அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

லிட்ரோ கேஸ் நிறுவன அனுசரணையில் மொனராகலை மாவட்ட பிரிவெனாக்களுக்கு கேஸ் கட்டமைப்புக்களை வழங்கும் நிகழ்வு சென்ற 03 ஆம் திகதி மொனராகலை, கும்புக்கண, கங்காராம விகாரையில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் கபீர் ஹாசிமிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் மொனராகலை மாவட்டத்தில் இருக்கும் 26 பிரிவெனாக்களுக்கு ரூபா 50 இலட்சம் பெறுமதியான முழுமையான கேஸ் கட்டளை அமைப்புக்கள் வழங்கப்பட்டன.
இங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், "நாட்டினது பிரிவெனா கல்வியை மேம்படுத்தும் மேலான நோக்கம் எம்மிடம் இருக்கிறது. மகா சங்கத்தினரின் நடவடிக்கைகள் இந்த நாட்டில் பாரிய செல்வாக்குச் செலுத்துகின்றன. அதனால் அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். விசேடமாக அரச நிறுவனம் என்ற வகையில் லிட்ரோ நிறுவனத்திற்கும், அமைச்சருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கிறேன்.

ஒரு விடயம் ஞாபகம் வருகின்றது. நாம் ஆட்சிக்கு வரும் போது கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூபா 2650 ஆக இருந்தது. நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் அதனை ரூபா 1350 ஆக குறைத்தோம். சென்ற பட்ஜட்டில் ரூபா 10 இனால் அதிகரித்தோம். இந்த சலுகை நாட்டில் எத்தனை இலட்சம் பேருக்கு கிடைக்கிறது.
இவற்றை நாம் செய்வதோடு இது பற்றி கதைக்காமல் இருப்பதால், இந்த அரசு என்ன செய்தது என்ற கேள்வியை எழுப்புகின்றனர். அதனால் செய்ததை சொல்ல வேண்டிய நிலைமையில் நான் உள்ளேன்" என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் ஊக்குவிப்பு முகாமையாளர் சாமர பண்டார, மொனராகலை மாவட்ட பிரிவெனாதிபதி பிக்குமார்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.