குறைபாடுகளை நிவர்த்தி செய்ததும் ஒப்பந்தக்காரரின் மீதப் பணத்தை விடுவிப்புச் செய்யவும் - செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்


பைஷல் இஸ்மாயில் -

டந்த 2016 ஆம் ஆண்டு (CBG) வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் ஏறாவூர் TC குவாடஸ் மைதானம் செப்பனிடப்பட்டு சில குறைபாடுகளுடன் முடிவுருத்தப்பட்டிருந்தன.

இந்நிலைமையில், மைதானத்தை செப்பனிட்ட ஒப்பந்தக்காரரினால் குறித்த இவ்வேலைக்கான பிடிகாசுக் கொடுப்பனவும் கோரப்பட்டிருந்தன. இதனைக் கவனத்திற்கொண்ட ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் குறித்த மைதானத்தின் நிலைமையினை பார்வையிடுவதற்காக உடனடி கள விஜயத்தை நேற்று (04) மேற்கொண்டு பார்வையிட்டார்.

அதற்கமைவாக, மைதானத்தில் இருக்கின்ற குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்த பின்னர் ஒப்பந்தக்காரரின் மீதப் பணத்தை விடுவிப்புச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட உத்தியோகத்தருக்கு ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் பணிப்புரை விடுத்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -