பாணந்துறை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பரவி வரும் செய்தியில் எந்தவித உண்மை தன்மையும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப்பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
சுனாமி எச்சரிக்கை தொடர்பில் பரவி வரும் வதந்தி காரணமாக கடலோர பிரதேசங்களிலுள்ள மக்கள் கடும் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
கடல்சார் பிரதேசங்களில் பூமியதிர்ச்சி ஏற்பட்டால் மாத்திரமே சுனாமி எச்சரிக்கை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவ்வாறான எந்தவித அனர்த்தங்களும் ஏற்படவில்லை எனவும் எவரும் அச்சப்பட தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான அவசர அனர்த்த நிலைமைகளின் போது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ச்சியாக மக்களை அறிவுறுத்தி வருவதாகவும் வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களை வேண்டிக்கொண்டுள்ளது.டிசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -