600 யாசகர்கள் ஜனவரி முதல் யாசகத்தில் ஈடுபட தடை

கொழும்பு நகரில் யாசகத்தில் ஈடுபடுவதற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து தடை செய்யப்படுவதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், கொழும்பு நகரில் 600 யாசகர்கள் யாசகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.யாசகத்தில் ஈடுபடுவோர்களின் வாழ்வாதாரம் கருதி,அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக அம்பலாந்தோட்டை ரிதிகமயில் 80 மில்லியன் ரூபா செலவில் புனர்வாழ்வு நிலையமொன்றை அமைத்துள்ளதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

யாசகத்தில் ஈடுபடுவதை நிறுத்துமாறு முதலில் அவர்களிடம் கருணை அடிப்படையில் கோருவதாகவும்,அதன்படி அவர்கள் செயற்படா விட்டால்,மாநகர சபை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -