சாய்ந்தமருதில் பதட்டம்.........!



சாய்ந்தமருதில் பதட்டம்.........
ஒரு அரசியல் கட்சியின் தலைவர் வருகைதரவுள்ளதாக கூறிக்கொண்டு கறுப்புக்கொடிகளை ஏந்திய குழுவினர் வீதிகளில் வலம் வருவதாகவும் ஒரு கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் தகவல்கள் வந்துள்ளன..

இணைப்பு:
சாய்ந்தமருதில் ஏற்பட்டுள்ள பதட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினர் யஹ்யாகானை எமது செய்திப்பிரிவு தொடர்பு கொண்டபோது அவர் இவ்வாறு கூறினார்:
தாங்கள் ஜனநாயகமான முறையில் தேர்தலில் களமிறங்கியுள்ளதாகவும் அதற்கு எதிரான முறையில் காடையர்களை உள்ளடக்கிய குழுவினர் சாய்ந்தமருதில் உள்ள தனது வீடு உட்பட தன்னுடன் இணைந்து தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடாத்தி சேதப்படுத்தியுள்ளதாகவும், இவ்வாறான தாக்குதல்கள் அவர்களது எதிர் பார்ப்புக்களை நிறைவேற்றப்போவதில்லை என்றும் தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ஜனநாயயகமான தேர்தல் ஒன்றை எதிர்கொள்ளக்கூடிய சூழலை பொலிசார் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தெரிவித்தார்.
சில்லறைகளின் தாக்குதல்களுக்கு தான் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை என்று தெரிவித்த யஹ்யாகான், தாக்குதல் நடாத்துபவர்களில் சுய ரூபங்கள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்றும் தங்களது தேர்தல் பரப்புரை விரைவில் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -