யேசு கிறிஸ்து பிறப்பான இன்று அனைவருக்கும் இன்முகத்துடன் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்;சியடைகின்றேன். என மத்திய மாகாண விவசாய,இந்து கலாசார மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஏழை மக்களின் வாழ்வில் இன்பம் கிட்டவேண்டும் என்பதற்காகவே கன்னி மரியாள் வயிற்றில் ஏழ்மையின் அவதாரமாய் அவதரித்தவர் யேசு கிறிஸ்து. அவரின் பிறப்பு மிக எளிமையானது அவரின் பிறப்பானது ஏழை மக்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தியது. எனவே நாம் இன்றும் அடிப்படை உரிமைகளையும் சலுகைகளையும் பெற வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.எமது மக்களின் அடையாளம் மற்றும் இருப்பை தக்கவைத்து கொள்ள வேண்டும்.
அரசாங்கமோ, அரசியல் தொழிற்சங்க வாதிகளோ எமக்கு நன்மை செய்யவில்லை என்று குற்றம் சாட்டுவதைவிடவும் எம்மை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் போட்டி மனப்பான்மை,வெறுப்பு,விரக்தி,பொறாமை இவை அனைத்தையும் ஓரளவாவது கைவிடுவோம்.
இன்று உலகிற்கு புதிய வெளிச்சத்தை உருவாக்கி ஏழை மக்களுக்காகவே அவதரித்த குழந்தை யேசு பிறந்த இந்நாளில் நாம் உறுதி எடுத்துக் கொண்டு எமது வாழ்வில் சிறந்த மாற்றங்களைக் நோக்கி பயணிப்போம்.எதிர்வரும் காலங்களை நாமே சிறப்பாக்கிக் கொள்ளும் மன உறுதியை நாம் பெற வேண்டுமென வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
