நோர்வூட் பிரதேச சபை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைக்களுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தமிழ் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்
அட்டன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் 17.12.2017 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபின் போதே இவ்வாறு தெரிவித்தார்
இதன் போது ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்
வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அதிக சபைகளில் சேவல் சின்னத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் இணைந்து போட்டியிடவுள்ளது.
இதனையடுத்து நோர்வூட் பிரதேச சபையிலும் மஸ்கெலியா பிரதேச சபையினும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தமிழ் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் என்னால் கையளிக்கப்பட்டது.
எனினும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸீன் பெயர் பட்டியலே ஊள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட உள்வாங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தமிழ் வேட்பாளர்கள் புக்கனிக்கப்பட்டுள்ளமையினால் பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள சுதந்திர கட்சியின் அங்கத்தவர்கள் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்பட்டடுள்ளது.
எம்மால் வழங்கப்ட்ட பெயர் பட்டியலில் அட்டன் டிக்கோயா நகரசபையில் மூன்று சிங்கள வேட்பாளர்கள் மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ளது தமிழ் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நீக்கப்பட்டுள்ளது.
எனினும் தன்னுடைய பெயர் மாத்திரம் மஸ்கெலிய பிரதேச சபைக்கு நசனல் ஆசனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும்.
இது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் துமிந்ததிசாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் செயலாளர் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
