ஏறாவூர் வாவிக்கரையில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது இயந்திரப் படகுச் சேவை





ஏ.ஜி.முஹம்மட் இர்பான்-

றாவூர் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காகவும், அவர்களின் வியாபார நன்மை கருதியும் இந்த இயந்திரப் படகுச் சேவையை இன்று ஆரம்பித்துள்ளளேன். இதன் மூலம் வியாபாரிகளும் பொதுமக்களுக்களும் உச்ச பயனை அடைந்துகொள்வார்கள் என்று நான் நாம்புகின்றேன் என ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்ற சேவைகளில் மற்றுமொரு சேவையாக படகுச் சேவையினை இன்று காலை (17) ஆரம்பித்து வைக்கும்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பு படுவாங்கரை, நரிப்புல்த்தோட்டம் போன்ற கிராமங்குகளில் செய்யப்படுகின்ற மரக்கறி வகைகள் மற்றும் மீன் வகைகளை

ஏறாவூர் பொதுச் சந்தைக்கு கொண்டு வரும் வியாபாரிகள் மட்டக்களப்பில் இருந்து ஏறாவூர் சந்தைக்கு தரை மார்க்கமாக வருவதாக இருந்தால் சுமார் 25 கிலோ மீற்றர் தூரம் சுற்றி வந்து தங்களின் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நிலை உள்ளதாகவும், நீர் மார்க்கமாக படகின் மூலம் வருவதாக இருந்தால் சுமார் 6 கிலோ மீற்றர் தூரமே தேவையாக உள்ளதாகவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டினார்கள்.

அதுமாத்திரமல்லாமல் நீர் மார்க்கமாக படகின் மூலம் கொண்டு வருகின்ற உணவுப் பொருட்கள் பழுதடையாமல் உரிய நேரத்துக்கு பொதுமக்களுக்கு வழங்க முடியும் என்று தெரிவித்தனர்.

இதேவேளை, ஏறாவூர் பிரதேச மக்களுக்கு உரிய நேரத்துக்கு மரக்கறி வகைகளும், மீன் வகைகளும் கிடைப்பதல்லை எனவும் அவ்வாறு கிடைக்கின்ற மரக்கறிளும், மீன்களும் பழுதடைந்த நிலையில்தான் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமையுள்ளது என்றும் இதனால் ஏறாவூர் பிரதேச மக்கள் பல சிறமங்களை எதிர்கொண்டு வருவதாக பொதுமக்களினால் சுட்டிக்காட்டப்பட்ட பல முறைப்பாடுகள் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில், குறித்த கிராமங்களுக்கு கடந்த வாரம் நேரடியாகச் சென்று வியாபாரிகளினதும் பொதுமக்களினதும் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டறிந்து கொண்டேன்.

இந்தப் படகுச் சேவையை ஆரம்பிப்பதன் மூலம் மக்களின் பொருளாதாரத்தினையும், அன்றாடம் கிடைக்கின்ற உணவுப் பொருட்களை மக்களுக்கு உரிய நேரத்துக்கு வழங்க இது அமையும் என்பதை கருத்திற் கொண்டு இச்சேவையினை கால தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியமைக்கு அமைவாகவே இன்றைய தினம் இதை ஆரம்பித்து வைத்துள்ளேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -