மேயர் வேட்பாளர் விடயத்தில் ஒருவருக்கு ஒருவர் அடிபிடிப்படும் நிலைமை அங்கு உருவானதையிட்டே தாருஸ்ஸலாத்தைவிட்டு நான் வெளியேறி விட்டேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கட்சியின் அம்பாறை மாவட்டபொருளாளருமான யஹ்யாகான் என்னிடம் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவித்த அவர், கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன்நெருக்கமாகப் பலர் உள்ளனர். அவர்களால் எனக்கு தடங்கல்கள் ஏற்படும் என்ற அச்சம் எனக்குள் தோன்றியிருந்தது.
எமது கட்சியில் உள்ள சில பழையவர்கள், தாங்களே “கோம்பை” சுமக்க வேண்டுமென்று திரிகிறார்கள்.ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் என்னைப் பயன்படுத்த தவறி விட்டது. என்னை அவர்கள் ஒரு டம்மியாகவே வைத்துள்ளனர். நான் எனது மனவேதனைகளை இன்று யாரிடம் சொல்வது?
கல்முனை மாநகர சபையின் மேயர் வேட்பாளராக என்னை நியமித்திருந்தால் சாய்ந்தமருதுவில் இன்று ஏற்பட்டுள்ளசவால்களை முறியடித்திருப்பேன் என்றார்.
யஹியான் இது தொடர்பில் என்னிடம் கூறியவற்றை அவரது குரலில் அவரது அனுமதியில் பதிவிடுகிறேன். கேளுங்கள்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-