வேட்புமனுக்களைக் கூட முறையாகப் பூர்த்தி செய்ய முடியாதவர்களால் எவ்வாறு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கமுடியும்?

காரைதீவு நிருபர் சகா-

“காலாகாலமாக தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் உருவாக்கப்பட்ட திருக்கோவில் பிரதேசம், தற்பொது சோபை இழந்து காணப்படுகின்றது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் இன்று ​மேலும் தெரிவித்ததாவது,

“யுத்தத்தினாலும் அனர்த்தங்களிலும் பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு, சம்மாந்துறை பிரதேச சபைகளைத் த.தே.கூ இழந்து நிற்கின்ற நிலைமை பெரிதும் கவலைக்குரியது.

“வேட்புமனுக்களைக் கூட முறையாகப் பூர்த்தி செய்ய முடியாதவர்களால் எவ்வாறு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து, சமூகத்தை வழிநடத்த முடியுமென்பதை கேட்க விரும்புகின்றேன்.

“தமிழ்த் தேசியத்துக்கு எதிராக இருந்தவர்களும் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களும், தமிழ் மக்களுடைய ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்களும் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து தேர்தலில் குதித்துள்ளமை கட்சியை பலவீனப்படுத்தும் என்பதில் ஐயமில்லை”
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -