ஆறு முஸ்லீம் நாடுகள் அமெரிக்க செல்ல தடை ட்ரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் அனுமதி..!

மெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ‘முஸ்லிம்கள் பயணத் தடை’ கொள்கையை அமெரிக்க உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதோடு முழு வீச்சில் அதை செயல்படுத்தவும் ஆதரவு அளித்திருக்கிறது.

சாடு, ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கும் ட்ரம்பின் கொள்கைக்கு எதிரான சில சட்டரீதியான தலையீடுகளால் அக் கொள்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அமெரிக்க அதிபர் அலுவலகம் அந்தத் தடையை நீக்குபடி அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்குக் கோரிக்கை விடுத்திருந்தது.

அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த 9 நீதிபதிகளில் 7 பேர் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

ட்ரம்பின் இக் கொள்கை தொடர்பாக நீதிமன்றங்களில் தற்போது விவாதிக்கப்பட்டு வந்தாலும் கூட சர்ச்சைக்குரிய இந்த கொள்கையை இனி முழுமையாக செயற் படுத்தலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -