திருகோணமலை மஹதிவுல்வெவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த மாமாவும் மருமகனும் யானையொன்றின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் இன்று(5) காலை அனுமதிக்கப்பட்டனர்.
மஹதிவுல்வெவ விகாரகம பகுதியில் சேனைப்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் இவர்களை வீட்டுக்கு வருகை தரும் வழியில் யானை தாக்கியதாகவும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் மஹதிவுல்வெவ - புபுதுபுர பகுதியைச் சேர்ந்த எச்.எம்.கிரிபண்டா (60 வயது) மற்றும் அவரது மருமகனான கே.அபேரத்ன (32 வயது) எனத் தெரியவருகின்றது.
யானையின் தாக்குதலால் மாமாவின் கால் உடைந்துள்ளதுடன் அவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரெனவும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
காட்டு யானையின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் யானை மின்வேலிகளை அமைத்துத் தருமாறு மஹதிவுல்வெவ பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.