வடக்கு–கிழக்கு என்பது எங்களது தாயக பூமியாகும்- கல்முனையில் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவிப்பு


ஏ.எல்.எம்.ஷினாஸ்-

டமாகாண மகளிர் விவகார,புணர்வாழ்வு மற்றும் சமூகசேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் கல்முனை குறுந்தையடி வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் பொதுமக்களை (29.11.2017) நேரில் சென்று சந்திதித்தார். இங்கு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டாா். தொடர்ந்து இங்கு உரையாற்றும் போது,

வடக்கு மக்களை விட சிலநேரம் கிழக்குமக்கள் கொடிய யுத்தத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கலாம். வடக்கு மக்களும் கிழக்கு மக்களும் ஒன்றாக இருந்தே போராட்டத்தை சந்தித்திருக்கிறோம். எனவே வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணயத்தைத்தான் நாம் கோருகின்றோம். இதனையே நாம் அரசிடம் கோரிநிற்கின்றோம். அரசு விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இணைந்த வடகிழக்கு என்பதில் உறுதியாக இருக்கிறோம். வடக்கு–கிழக்கு என்பது எங்களது தாயக பூமியாகும்.

புதியதேர்தல் திருத்தச்சட்டத்தின் மூலம் 25 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கின்றோம். இது இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். பெண்கள் தமது அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக எமது கலாசார விழுமியங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்வரவேண்டும். குறிப்பாக உள்ளுராட்சி தேர்தலில் இங்குள்ள மக்கள் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாக எமது வரிப் பணங்களை கொண்டு எமது அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும். இங்கு இந்த வீட்டுத்திட்டத்தில் வாழும் மக்கள் குடிப்பதற்கு கூட சுத்தமான நீர் இன்றி கஸ்டப்படுவது வேதனையை தருகின்றது. இதனை நான் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவருவேன்.

இன்று கல்முனை பகுதியை பொறுத்தவரையில் சாய்ந்தமருது மக்கள் தங்களை தாங்களே ஆழ வேண்டும் என்ற போராட்டம் நியாயமானது. அவர்களுக்கான தனியான உள்ளுராட்சி மன்றத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி முன்வரவேண்டும். கல்முனையில் ஒரு இனம் இன்னெரு இனத்தை அடக்கி ஆழ முடியாது. 

இதற்கு நீங்கள் உங்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்து மாநாகர சபைக்கு கூடுதலாக அனுப்ப வேண்டும்.
இங்கு வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் பெதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட அமைச்சர் நீங்கள் தெரிவித்த பிரச்சினைகளை புலம்பெயர் தமிழர்களின் நிதியை கொண்டு அல்லது எனது சொந்த நிதியை கொண்டு செய்துதருவேன் என்றாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -