உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுடன் இணைந்து எமது நாட்டு முஸ்லிம் மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்
இந்த நாள் நாகரிக பாரம்பரியத்தை கட்டியெழுப்புவதற்கு வழிவகுத்த சமாதானம் மற்றும் ஐக்கியத்தின் அடிப்படையில் அமைந்த பெருமானாரின் போதனைகளின்பால் முஸ்லிம்களின் கவனத்தை பெரிதும் ஈர்ப்பதாக அமைந்துள்ளது.
இன்றைய உலகில் பன்மைத்துவ சமூகத்திற்காக நபியவர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட 'மதீனா சாசனம்' நவீன உலகின் பல்வேறு கேள்விகளுக்கு பதில்தரும் ஒரு முக்கிய மூலமாகவுள்ளது. அது கலாசார மற்றும் நம்பிக்கை வேறுபாடுகளின் அடிப்படையில் அமைந்த குழுக்களுக்கிடையே முரண்பாடுகளைத் தவிர்த்து தீர்வுகளை கண்டடைவதற்கான அணுகுமுறைகளை முன்வைக்கிறது.
அவ்வாறே மனித இருப்பில் உள்ள பிணக்குகளைத் தீர்ப்பதற்கு மிகவும் பயனுறுதிவாய்ந்த வழி மத்தியஸ்த்தமாகும் என்பதையும் இந்த மதீனா சாசனம் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது எல்லா சமூகங்களின் மத்தியிலும் பாதுகாப்பையும் நலனோம்புகையையும் உத்தரவாதப்படுத்துவதுடன் சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கிறது.
இந்த வகையில் தான் இறைத்தூதர் முஹம்மது நபியின் சிரார்த்த தினம் நினைவுகூற படுகிறது.
கிறிஸ்துவிற்கு பின் 571 ஆம் ஆண்டு ரபிஉல் அவ்வல் மாதம் 12 ஆம் திகதி மக்காவில் பிறந்த மொஹமது நபி அவர்கள்
உலக சமூக வாழ்வின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டுள்ளார்.
இதனால் தான் இஸ்லாமிய மாதங்களில் மூன்றாவது மாதமான ரபீஉல் அவ்வல் மாதத்தில் 'மீலாது விழா' என்ற பெயரில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளை ஒரு விழாவாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
எனவே நபிகள் நாயகத்திற்கு நாம் வழங்கும் கௌரவம் யாதெனில் இஸ்லாம் மார்க்கம் குறிப்பிட்டுள்ள மனித இனத்தை சகோதரத்துவம் பரஸ்பர புரிந்துணர்வு ஒத்துழைப்பு மற்றும் சகிப்புத்தன்மையின் அடிப்படையிலான சரியான பாதையில் செல்வதாகும்.
இலங்கையில் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் போதனைகளை பின்பற்றுகின்றவர்கள் சகிப்புத் தன்மை புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தால் வளம்பெற்ற ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்ய முடியும் என நான் நம்புகிறேன். இது நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை பலப்படுத்தும் நபியவர்களது போதனைகள் தனிமனித வாழ்க்கைக்கு மட்டுமல்லாது சமூக வாழ்க்கைக்கும் வழிகாட்டுபவையாகும். அதன் மூலம் தேசிய ஐக்கியம் மலரும் என்பது எனது நம்பிக்கையாகும்.