மனித உடலுடன் பிடிபட்ட அபூர்வ மீன்!- அதிர்ச்சியில் மக்கள்



விசாகப்பட்டணம்: மனித உடலுடன் கூடிய அபூர்வ மீன் ஆந்திர கடல்பகுதியில் பிடிபட்டுள்ளது.
விசாகப்பட்டணம் கடற்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் மீனவர்கள் சென்றனர்.

நடுக்கடல் பகுதியில் இரவில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது கனமான ஒன்று வலையில் சிக்கியது.
இதனால் இரண்டு மூன்று மீனவர்கள் சேர்ந்து வலையை மீட்டனர்.
வலையில் பெரிய மீன் ஒன்று சிக்கியது அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. அதனை வலையோடு எடுத்து படகில் வைத்தனர்.
சிறிதுநேரம் அது துடித்துக்கொண்டிருந்தது. பின்னர் துடிப்பு அடங்கிவிட்டது. விடிந்ததும் ஆர்வத்துடன் பிரமாண்ட மீனை பார்வையிட்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பிடிபட்ட மீனின் கழுத்து பாகத்தில் இருந்து இடுப்பு வரை மனித உடலை போன்று இருந்தது. இரு கைகளும், அவற்றில் விரல்கள், நகம் ஆகியவையும் இருந்தன.

இடுப்புக்கு கீழே சாதாரண மீனைப்போன்ற வால் பகுதி காணப்பட்டது. இதனை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து அதனை ஒப்படைத்துவிட்டனர் மீனவர்கள்.
அதிசய மீனை குளிரூட்டும் நிலையத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
நன்றி இணையம்>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -