ஒரிசா மாநிலத்தை சேர்ந்த மாஜ்கி என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் காசநோயால் இறந்து போன தனது மனைவியின் உடலை கொண்டு செல்வதற்கு மருத்துவமனை நிர்வாகம் அம்புலன்ஸ் தராத காரணத்தால் தனது தோளில் சுமந்தபடி சுமார் 12 கிலோ மீட்டர் நடந்து சென்றார்.
இவருடன் இவரது மகளும் நடந்து சென்றார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்கள் மற்றும் செய்திகளில் வெளியாகி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.
இதனைப்பார்த்த பலரும் மாஜ்கிக்கு நிதி உதவி செய்ய முன்வந்தனர். பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா ரூ.9 லட்சத்தை நிதியுதவியாக அளித்துள்ளார்.
பிரதான மந்திரியின் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் இவருக்கு வீடு கட்டிக்கொடுக்க உறுதியளிக்கப்பட்டது. இவரது 3 மகள்களும் படிக்கும் பள்ளி நிர்வாகம், இவர்களுக்கு இலவச கல்வி அளித்து வருகின்றது.
வேறு திருமணம் செய்துகொண்ட மாஜ்கியின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். பலரது உதவியால் தற்போது மாஜ்கி நல்ல வசதியுடன் வாழ்ந்து வருகிறார்.
ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள ஹோண்டா இரு சக்கர வாகனத்தில் இவர் பயணித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அன்று தனது மனைவியின் உடலை தனது தோளில் சுமந்துகொண்டு நடந்துசென்றவர் இன்று இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிறார்.
