அரச வங்கியில் கொள்ளை வாடிக்கையாளர் ஒருவர் காயம்-இன்று தங்காலையில் சம்பவம்

ங்காலை – குடாவெல்லையிலுள்ள அரச வங்கி ஒன்றில் பெருந்தொகைப் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது கொள்ளையர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் காயமடைந்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

முகத்தை மூடிக்கட்டியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த அரச வங்கிக்குள் நுழைந்துள்ளனர்.

இரு கொள்ளையர்களும் ஆயுதமுனையில் வங்கியில் இருந்து சுமார் 50 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கொள்ளையர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்னர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இதனால், வங்கிக் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைக்காக வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் காயமடைந்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.வீ
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -