வர்த்தக மற்றும் போக்குவரத்து பங்காண்மையை பலப்படுத்தும் அமெரிக்கா மற்றும் இலங்கை


ண்டச் சரக்குகளின் நகர்வை மேலும் வினைத்திறனாகவும், இலாபகரமாகவும் வசதிப்படுத்தச் செய்வதற்காக 2002 ஆம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்க - இலங்கை திறந்த ஒப்பந்தத்தை திருத்துவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை

மற்றும் மாலைதீவுக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் மற்றும் சிவில் விமான சேவைகள் செயலாளர் திரு. ஜி.எஸ். விதானகே ஆகியோர் டிசம்பர் 4ஆம் திகதி கைச்சாத்திட்டனர். இந்தத் திருத்தமானது உலகளாவிய சரக்கு கடுகதி விநியோக வலைப்பின்னல்களை பலப்படுத்துவதுடன் இருதரப்பு இணைப்பு மற்றும் போட்டித்தன்மையை அதிகரிக்கச் செய்வதுடன், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை வசதிப்படுத்துகிறது.

“எமது இருதரப்பு திறந்த வானங்கள் ஒப்பந்தங்களுக்கான இந்தத் திருத்தமானது ஐக்கிய அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவானதும் நீண்டகாலம்நீடித்து இருப்பதுமான வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்தும்” என தூதுவர் கேஷப் தெரிவித்தார்.

“இலங்கையின் பெரிய வர்த்தகப் பங்காளர் என்ற வகையில் ஐக்கிய அமெரிக்காவானது எமது இரு தேசியங்களின் குடிமக்களுக்கும் வேலைவாய்ப்பையும் சந்தர்ப்பத்தையும் வழங்கும் பொருளாதார வளர்ச்சியை நாடி நிற்கிறது.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

2017 டிசம்பர் 4 – 8ம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறும் பத்தாவது சர்வதேச சிவில் விமானச் சேவைகள் நிறுவனத்தின் (ICAO) விமானச் சேவைகள் பேச்சுவார்த்தை நிகழ்வின் பொழுது இக் கைச்சாத்திடல் நிகழ்வு இடம்பெற்றது. ICAN 2017 இன் கட்டமைப்புக்குள்ளாக ஐக்கிய அமெரிக்கா பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நாடுகளுடன் கூட்டங்களை நடாத்துவதுடன்

எல்லா சரக்கு நடவடிக்கைகளுக்குமாக முக்கிய ஏழாவது சுதந்திர உரிமைகளை உள்ளடக்குவதற்கு, ஐக்கிய அமெரிக்கா விமானங்களுக்கான உரிமைகளை விஸ்தரிப்பதற்காக

தற்போதுள்ள இரண்டு விமானப்பறப்பு ஒப்பந்தங்களை திருத்துவது தொடர்பாக கொள்கை

அளவில் இணங்கிக் கொண்டது. கடந்த வருட ICAN ஆனது வியாபார விடயங்களைத்

தீர்த்துக்கொள்வதற்கும் இருதரப்பு பங்காளர் அரசாங்கங்களுடன் சிவில் விமானப் பறப்பு பிரச்சினைகளின் ஒரு பரந்துபட்ட வீச்சைக் கலந்துரையாடுவதற்கான இடத்தை வழங்குகிறது. ஐக்கிய அமெரிக்க தூதுக்குழுவானது அரச திணைக்களம் மற்றும் போக்குவரத்து திணைக்களத்திலிருந்தான பிரதிநிதிகளை உள்ளடக்குகிறது..

தற்போது அமுலில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் விமானப் பறப்புச்சேவைக் கொள்கை மீதான தகவல்கள் மற்றும் திறந்த வானங்கள் ஒப்பந்தங்கள் என்பன அரச திணைக்களத்தின்

பின்வரும் இணையத்தளத்தில் கிடைக்கக்கூடியதாக உள்ளது.

https://www.state.gov/e/eb/tra/ata/
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -