அட்டன் நகரிலுள்ள கடல் மீன் விற்பனை நிலையமொன்றில் வெள்ளிக்கிழமை நாட்களில் குறைந்தவிலையில் மீன் விற்பனை செய்யவதாக கூறி பழைய மீன்களை கலப்படம் செய்து விற்பனை செய்வதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த மீன் விற்பனை நிலையத்தில் ஒரு வார காலமாக மீன் விற்பனை செய்யப்பட்டு எஞ்சிய மழைய மீன்களைபுதிதாக இக்குமதி செய்யும் புதிய மீன்களில் கலப்படம் வெள்ளிக்கிழமை நாட்களில் குறைந்த விலையில் மீன்கள் விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து பழைய மீனகளை விற்பனை செய்வதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பணம் கொடுத்து பெற்றுச்செல்லும் மீன்களை பெற்றுச்செல்லும் நுகர்வோர் சமையல் செய்தும் உட்கொள்ள. வீசும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் அட்டன் டிக்கோய நகரசபையின் சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்னன் தெரிவிக்கையில் இவ்வாறான முறையாடு தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாவும் குறித்த கடல் மீன் விற்பனை நிலையத்திற்கு மீன்களை சேமித்து வைக்க குளிர் அரை இல்லாமை தொடர்பில் எச்சரிக்கை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் இனி வரும் நாட்களில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நுகர்வோர் உடனடியாக எமக்கு அறிவிக்குமாறும் தெரிவித்தார்.
