2017 இன் அதிதிகளாகும் “அறபாவின் ஆளுமைகள்” விருது வழங்கி வைப்பு -படங்கள்





ஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான் -
ட்டாளைச்சேனை அறபா வித்தியாலத்தின் 2017 ஆம் ஆண்டின் “அறபாவின் ஆளுமைகள்” விருதும், பரிசளிப்பு விழாவும் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டின் கீழ் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது. 

வித்தியாலய அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் இன்று காலை (05) இடம்பெற்ற இந்த விழாவுக்கு முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர்களான ஏ.எல்.முஹம்மட் நஸீர் மற்றும் எம்.எஸ்.உதுமாலெப்பை, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது 2017 இன் அதிதிகளாகும் “அறபாவின் ஆளுமைகள்” விருதினை இலங்கை நிருவாக சேவையில் (SLAS) கடமையாற்றுகின்ற ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனிபா மற்றும் இலங்கை திட்டமிடல் சேவை (SLPS) அம்பாறை மாவட்ட செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல்.தௌபீக் ஆகியோர்களுக்கு இந்த விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் பாடசாலையில் விஷேட செயற்பாடுகளில் ஆர்வம் காட்டிய மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதுகளை முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர்களான ஏ.எல்.முஹம்மட் நஸீர் மற்றும் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர்கள் வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -