பாறுக் ஷிஹான்-
தேசிய மீலாத் விழா 2017 நிகழ்வுகள் குறித்த மீளாய்வுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாணம் கச்சேரியில் நேற்று(30) நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் ஒழுங்கமைப்புகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டதுடன் இறுதியான தீர்மானங்களும் முன்னெடுக்கப்பட்டன.
மேலும் தேசிய மீலாத் விழா நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்பதனால் காலநிலை மாற்றங்களைக் கருத்தில்கொண்டும் நிகழ்வுகளை சிறப்பாக ஒழுங்கமைக்க அனைத்து யாழ்ப்பாண முஸ்லிம்களும் ஒத்துழைப்போடு செயற்படவேண்டும் என முஸ்லிம் கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் அப்துல் மலிக் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் ஏலவே முன்மொழியப்பட்டிருந்த செயற்குழுவிற்கு மேலதிகமாக பொறுப்புக்களை துரிதகதியிலும் வினைத்திறனாகவும் செய்துமுடிக்கும் வகையில் ஒருசில மாற்றங்களும் இக்கூட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்டன.
மேற்படி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் கே.காதர் மஸ்தான் மாகாணசபை உறுப்பினர்களான இம்மானுவேல் ஆர்னோல்ட் அய்யூப் அஸ்மின் யாழ் கிளிநொச்சி உலமா சபை கிளைத் தலைவர் சுபியான் மௌலவி முஸ்லிம் கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் அப்துல் மலிக் ஆகியோர் பங்கேற்றனர்.
அத்துடன் பல்வேறு புதிய தீர்மானங்களோடு பணிப்பாளர் அவர்களின் நன்றியுரையோடு கூட்டம் இனிதே நிறைவுற்றது.

