எம்.எம்.நிலாம்டீன்-
அம்பாரை மாவட்டம் அட்டாளைச்சேனை (DCC) பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் மறைப்புக் குறித்து ஜனாதிபதியிடம் புகார்!

,துகுறித்து அட்டாளைச்சேனை பதில் பிரதேச செயலாளர் மீது தகுந்த விசாரணைகள் நடத்தி உண்மைகள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுத்து பதில் பிரதேச செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் முறையிடப்பட்டுள்ளது.
மற்றும் முறைப்பாட்டின் பிரதிகள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜீர அபேவர்தன மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் நில்டி அல்விஸ் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழவின் தலைவர் தர்மசேனா திஸ்ஸநாயகா ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு இணைத் தவைர்களான பிரதி அமைச்சர் பைசல் காசிம் மற்றும் உதுமாலெவ்வை மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் முகம்மட் நஸீர் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அட்டாளைச்சேனை ஊர்க்கரை வீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வடிச்சல் குழாய் அமைக்கும் திட்டத்தை இடைநிறுத்தி மாற்றுத் திட்டமாக 5 வீதிகளின் பெயர்கள் முன்மொழியப்பட்டு அந்த வீதிகள் ஊடாக வடிச்சல் குழாய்கள் அமைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஊர்க்கரை வீதி விடயமாக 25 நிமிடங்கள் பிரதேச செயலாளர்அதிசயராஜ்,உதவிதிட்டமிடல் பணிப்பாளான அஸ்லம் மற்றும் ஹூசைன் இணைத் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் நஸீர் ஆகியோர்கள் உட்பட பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் விவாதிக்கப்பட்ட வீடியோ கிளிப் தகுந்த ஆதாரமாக பலஊடகவியலாளர்கள் ஆதாரமாக வைத்துள்ளார்கள்.
இந்த ஊர்க்கரை வீதி விடயமாக 25 நிமிடங்கள் பிரதேச செயலாளர்அதிசயராஜ்,உதவிதிட்டமிடல் பணிப்பாளான அஸ்லம் மற்றும் ஹூசைன் இணைத் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் நஸீர் ஆகியோர்கள் உட்பட பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் விவாதிக்கப்பட்ட வீடியோ கிளிப் தகுந்த ஆதாரமாக பலஊடகவியலாளர்கள் ஆதாரமாக வைத்துள்ளார்கள்.
இந்நிலையில் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் முழுக் கூட்டக் குறிப்பின் பிரதி ஆவணமாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பிரதியில் 25 நிமிடமாக விவாதிக்கப்படும் ஊர்க்கரை வீதி பற்றிய எந்தவொரு விடயமும் இல்லாது மறைக்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்டுள்ள அப்பிரதியில் ஊர்க்கரை வீதி குறித்த எந்தவொரு பதிவும் வழங்கப்படவில்லை.
அரசபணம் வீண் விரயம்
அட்டாளைச்சேனை ஊர்க்கரை வீதிக்காக கடந்த காலங்களாக வருடாந்தம் பல லட்சங்கள் வீண் விரயமாக அட்டாளைச்சேனை பிரதேச சபையால் செலவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாண்டில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் ஊடாக 10 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை ஊர்க்கரை வீதிக்காக கடந்த காலங்களாக வருடாந்தம் பல லட்சங்கள் வீண் விரயமாக அட்டாளைச்சேனை பிரதேச சபையால் செலவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாண்டில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் ஊடாக 10 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஊர்க்கரை வீதியின் ஓரங்களில் குடியிருக்கும் குடியிருப்பாளர்களின் எதிர்ப்புக்களை மீறி இந்த வீதியில் குழாய் அமைக்கும் ஒப்பந்தக்காரரிடம் கொமிஷன் பெறும் ஒரே நோக்கில் மக்களின் எதிர்ப்பையும் மீறி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு புறம்பாக தன்னிச்சையாக பிரதேச செயலகம் செயல்பட்டுள்ளது குறித்து பொது மக்கள் பெருத்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள குழாய் அமைக்கும் திட்டமானது நீர் வடிந்தோடும் திட்டமல்ல. நிறைவேறாத திட்டத்தைக் கொண்டு அரச பணம் வீண்விரயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளது குறித்து ஜனாதிபதி செயலணிக்கு தனியான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனைபிரதேசசெயலகத்தில் வருடாந்த இடமாற்றம் இல்லை
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் பல உத்தியோகஸ்தர்கள் 5 வருடங்களையும் கடந்த மேலதிகமாக கடமையாற்றி வருகின்றார்கள்.
5 வருடங்களையும் கடந்து கடமையாற்றும் சாதாரண தொழிலாளி முதல் அமைச்சின் செயலாளர் வரை வேறு இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண அமைச்சின் சுற்று நிருபம் தெரிவிக்கின்றது.
சுற்று நிருப இலக்கம்- சீஎல்-4-1-2004 நிலைய இடமாற்றம்)
மற்றுமொரு சுற்று நிருபம் 02-2004- இலக்கம் கொண்ட 25-05-2005 ஆம் திகதி அமுலுக்கு வந்துள்ள சுற்று நிருபத்தின் படி 5 வருடங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் சேவையாற்றியுள்ள அரச ஊழியர் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கின்றது.
மற்றும் இலங்கை தாபனக் கோவை சட்டத்தின் பிரகாரம் தாபனக் கோவை வொலிம் ஒன்று சாப்டர் 111 ல் இடமாற்றம் பக்கத்தில் 31.32.33.34. ஆம் பக்கங்களில் அரசாங்க திணைக்களங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் இடமாற்றம் குறித்து மிகவும் தெளிவாக சொல்லப்படுகின்றது.
ஆனால் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் 5 வருடங்களுக்கும் மேலாக 6-7 வருடங்களையும் கடந்து வருடாந்த இடமாற்றம் இல்லாமல் பலர் உள்ளார்கள். இவர்களை இடமாற்றம் செய்து மற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அரசாங்க பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.