அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியுலன்ஸ் வண்டி எருமை மாட்டுடன் நேற்றிரவு (06) மோதி விபத்துக்குள்ளானதில் வாகனம் சேதமடைந்துள்ளதாக கோமரங்கடவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையிலிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு சென்ற வேளை வாகனத்தை நோக்கி எருமை மாடு வேகமாக வந்து மோதியதாகவும் அதனால் இவ்விபத்து இடம் பெற்றதாகவும் அம்பியுலன்ஸ் சாரதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் தெரியவருகின்றது.
விபத்தில் சிக்கிய எருமை மாடு அவ்விடத்தில் வீழ்ந்து கிடப்பதாகவும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்சென்ற நோயாளியை மஹதிவுல்வெவ பிரதேச அம்பியுலன்ஸ் வண்டியில் கொண்டு சென்றதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.


