எரிபொருள் விலை குறையப் போகிறது, கையிருப்பிலுள்ளவற்றை விற்பதற்கே சதி

ரிபொருள் விலை குறையப் போவதாக தெரிவிக்கப்படும் தகவல்களை மையப்படுத்தி தம்மிடம் கையிருப்பில் உள்ள எரிபொருள்களை விற்பனை செய்து கொள்ள முன்னெடுக்கும் உத்தியே இந்த பொய்யான பிரச்சாரம் என பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முதலாவது நியாயமாக எரிபொருள் கப்பலில் வந்த எரிபொருள் தரமற்றது என்ற காரணம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், எரிபொருள் விலை குறையப் போவதாகவும் ஒரு செய்தி காணப்படுகின்றது.

இதனைக் கருத்தில் கொண்டு தங்களிடமுள்ள அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருட்களை விநியோகித்து முடித்துக் கொள்ள முன்னெடுக்கும் ஒரு நடவடிக்கையே இந்த பொய்யான பிரச்சாரம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -