ஒரு பிரதேசத்தினை முக்கியமான பிரதேசமாக அடையாளப்படுத்த அப்பிரதேசத்தில் உள்ள சமூகமானது ஐந்து முக்கிய இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும் என கிழக்கு பல்கலை கழகத்தின் சிரேஷ்ட்ட விரிவுரையாளர் அஸ்ஸேய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி தெரிவித்தார்.
கடந்த 12.11.2017 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்ற சமூகத்திற்கு பணியாற்றியோர்கள், புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றியோர்களுக்கான பாராட்டு விழாவிலேயே மேற் கண்டவாறு விரிவுரையாளர் அஸ்ஸேய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி உரையாற்றினார்.
கல்குடா சரீப் அலி ஆசிரியர் அமைப்பின் ஒழுங்கமைப்பில் இடம் பெற்ற குறித்த பாராட்டு விழாவில் விரிவுரையாளர் அஸ்ஸேய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி ஆற்றிய உரையின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.