கடந்த வௌ்ளிக்கிழமை இரவு இந்த நாட்டையே அதிர வைத்த சம்பவம், நாட்டின் பல பாகங்களிலும் உறவுகளின் நிலை குறித்து கவலையேபடு இருந்திருப்பர். அச்சம்பவம் அரசியல் மட்டத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் இன்னும் இனவாதம் பேச வழியமைத்தது. காலி, கிந்தொட்டை விவகாரம் குறித்து நாம் அறிந்ததே. இரண்டு குழுக்களின் மோதலினால் அப்பாவி சிறுபான்மை மக்களின் வீடுகள் சொத்துக்கள் இரவோடு இரவாக எரியூட்டப்பட்டன, பரபரப்பும் பதற்றமும் நிறைந்த வேளை தொலைபேசியூடாக உறவுகளை நலம் விசாரித்துக்கொண்டிருந்தோம்.
சம்ப இடத்திற்கு அமைச்சர்களான பைஸர் முஸ்தபா மற்றும் சந்திம ஆகியோர் விரைந்தமை கொஞ்சம் ஆறுதல் தந்தது, இரவு பதினொரு மணியளவில் அமைச்சர்கள் இருவரும் எரியூட்டப்பட்ட வீடுகளையும் மதஸ்தலத்தையும் பார்வையிட்டவிட்டு சுமூகமான பேச்சுவார்த்தை ஒன்றினை எதிர்பார்த்து காலி, கிந்தொட்டை தூபாராம விகாரைக்கு சென்றபோது அங்கு கூடியிருந்த சிலர் எதிர்ப்புக்களை தெரிவித்தது மட்டுமல்லாமல் சமாதானத்தை எதிர்பார்த்துச்சென்ற அமைச்சர்களையும் உதாசீனம் செய்துள்ளனர்.
சென்ற நோக்கம் நிறைவேறாமல் திரும்பிய அமைச்சர்களை நோக்கி கற்களும் எறியப்பட்ட்டுள்ளன. அந்த நிலையில் அமைச்சர் ஒருவரின் வாகானத்தின் பின்பும் சிதைவடைந்துள்ளது.
வெறுமனே அரசியலுக்காக சென்று புகைப்படங்களுடன் திரும்பிய சிலர் பேசப்பட்டாலும் இவர்களின் செயல் பெருமையளிக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -