வாழைச்சேனை முர்சித்-
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஓட்டமாவடி பொது நூலகத்தினால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபையில் நடைபெற்றது.
நூலகர் திருமதி.ஹப்சா மஜீட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய அதிபர் ஏ.ஜி.பிர்தௌஸ், ஓட்டமாவடி சமுர்த்தி வங்கி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீட், ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ.சல்மான் வஹாப் மற்றும் மாணணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்.
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுப் பொருட்கள், என்பன வழங்கப்பட்டதோடு, வெற்றி பெற்ற நாடகம் பிரதேச சபைக்கு முன்னால் வீதி நாடகமாக அரங்கேற்றப்பட்டது.







