ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்-
தேசிய மரநடுகை பசுமை திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் ஓட்டமாவடி - நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கலாபீடத்யில் மரங்களை கையளிக்கும் நிகழ்வும் மரம் நடும் வைபவமும் இன்று 2 ம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் சமூர்த்தி முகாமையாளர் யு. அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி நிலையத்தின் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் வீ.ரீ.எம். முஸ்தபா ( தப்லீகி), பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஸப்ரி, எஸ்.எச்.எம் அறபாத் ஆகியோர்களோடு மர்கஸ் அந்நூர் கல்வி நிலையத்தின் ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டதும் குறிப்பிடடத்தக்கது.

