தொன்னூறு வருடங்களுக்கு பிறகு மலையக மக்களுக்கு இந்த ஆண்டுதான் காணியுரிமை



தலவாக்கலை பி.கேதீஸ்-

ன்றைக்கு தொன்னூறு வருடங்களுக்கு முன்பே அரசியல் உரிமையை வென்றெடுத்த மலையக மக்களுக்கு இந்த ஆண்டுதான் காணியுரிமை கிடைத்திருக்கிறது. இதற்கு முன்னர் லயன் அறைகளை சொந்தமாக்குவதாக கடிதங்களை பெற்றுக்கொடுத்த அரசியல்வாதிகள் செயற்பட்ட மலையகத்தில் அமைச்சர் திகாம்பரம் காலத்தில் தான் தோட்டத் தொழிலாளர்களுக்காக தனிவீடுகளுக்கான முழு உரித்துடனான காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கப்படுகின்றது. இது வரலாற்று சாதனையாகும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார். 

மலையகப் பெருந்தோட்டப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தனிவீடுகளுக்கு முழு உரித்துடனான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதி தலைமையில் தலவாக்கலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுமார் ஆறாயிரம் காணி உறுதிகளை வழங்கும் இரண்டாம் கட்டம் பிரதமர் தலைமையில் ஹட்டனிலே இடம்பெற்றது. இதன் தொடர்ச்சியாக பிரதேச வாரியாக காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. 

அதன் ஒரு கட்டமாக கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட குயின்ஸ்பெரி தோட்ட குடியிருப்பாளர்கள் 23 பேருக்கு காணி உறுதி வழங்கிவைக்கும் நிகழ்வு அண்மையில் கொத்மலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ாமேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மலையக மக்களின் அரசியல் வரலாறு நீண்டது. 200 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை நாட்டுக்கு கூி்ாலிகளாக அழைத்து வரப்பட்ட மக்கள்ன
தமது நூறாவது ஆண்டிலேயே தொழிற்சங்க, அரசியல் ரீதியாக தமது அடியை எடுத்து வைத்தனர். 1925 ஆம் ஆண்டிலும், 1931 ஆம் 55காரணமாகததான் அன்று
எமது பிரதிநிதிகள் சட்டமன்றத்தி
சென்றன!_பின்னதாக 
குடியுரிமை பறிக்கப்பட்டதால் எமது அரசியல் வரலாறு திரிபுபடுத்தப்பட்டது.@@ அதற்கு பின்னதான வாக்குரிமை போராட்டத்தையே மலையகத்தின் முதல் அரசியல் போராட்டமாகக் காட்ட முனைவது வரலாற்றை தவறாக திரிபுபடுத்துவதாகிவிடும். அவரவர் வசதிக்கு ஏற்ப வரலாறு வளைந்துகொடுக்காது. எது உண்மையோ அது என்றோ ஒருநாள் வெளிப்பட்டுத் தீரும். மலையக தோட்டத் தொழிலாள மக்களுக்கு முழு உரித்துடனான காணியுரிமை பெற்றுக்கொடுக்கப்பட்டது ஜனாதிபதி மைத்திரிபால பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சியில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பங்கேற்றகாலத்தில் அமைச்சர் திகாம்பரம் மலைநாட்டு பதிய கிராமங்களாக அமைச்சராக வகித்த போது எனும் வரலாற்றுப்பதிவை எவராலும் திரிபுபடுத்த முடியாது. இந்த வரலாற்று சாதனைகளை திசை திருப்ப பெயர் மாற்ற நாடகங்களை சிலர் அரங்கேற்றி வருகின்றனர். 

அதிகளவான தியாகங்களும் விட்டுக்கொடுப்புகளும் செய்து இலங்கை நாட்டில் இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்கள் இப்போது உறுதி பெற்று வருகின்றனர். இவர்கள் மீது மீண்டும் இந்திய அடையாளத்தை பதித்து அவர்களை மீண்டும் நாடற்றவர்களாக்கும் முயற்சியில் யாரும் இறங்க முற்படக்கூடாது. 

இலங்கைக்கு வந்து இருநூறு ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது தான் காணியுரிமையை இலங்கையில் பெறுகின்றனர். உள்ளூராட்சி அதிகார ஆட்சியில் பங்கேற்கும் உரிமையைப் பெறுகின்றனர். இவற்றை இல்லாமல் ஆக்க ஒரு போதும் இடம் அளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -