கிராம உத்தியோகத்தர்களுக்கான உற்பத்தித்திறன மேம்பாட்டு மாநாடு


கிராம சேவை அலுவலகங்களை உற்பத்தித்திறன் மிக்க அமைப்பாக மாற்றுகின்ற அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டத்திற்கு அமைவாக தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் அனுசரனையில் ஒழுங்கு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான உற்பத்தித்திறன் மேம்பாட்டு மாநாடு பிரதேச செயலாளர் ஜனாப் I.M ஹனீபா தலைமையில் கடந்த 2017.11.14 ம் திகதி சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

மேட்படி நிகழ்வில் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான M.M.M அர்ஷத் மற்றும் F.Z சிபானி, கிராம நிருவாக உத்தியோகத்தர் M.S.M நளீர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் M.I இஷ்ஹாக், கலாசார உத்தியோகத்தர் M.I அம்ஜாத், விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர் M.M சாக்கீர், அபிவிருத்தி உத்தியோகத்தர் A.H ஜிப்ரி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், எனப் பலரும் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒருங்கினைப்பாளர் S.ரவீந்திரன் வளவாளராகக் கலந்து கொண்டு விளக்கமளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -