யாழ் பல்கலைக்கழகம் உட்பட பல இடங்களில் மாவீரர் வாரம் அனுஸ்டிப்பு-படங்கள்






பாறுக் ஷிஹான்-

ட்சி மாற்றத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கில் யாழ் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று (21) ஆரம்பமாகி உள்ளன.

வல்வெட்டித்துறை கம்பர்மலையில் அமைந்துள்ள களத்தில் முதல் வித்தான மாவீரன் லெப்ரினல்ட் சங்கரின் நினைவு தூபி
துப்புரவுசெய்து வெள்ளையடித்து மாலை 6 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது மக்கள் மாவீரர் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

இதுமட்டுமல்லாது வல்வெட்டித்துறை தீருவிலி்ல் அமைந்துள்ள கேணல் கிட்டு குமரப்பா புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளின் நினைவுத்தூபிகள் இருந்த இடங்களும் துப்புரவு செய்யப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவாலயத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் உயிரிழந்த மாவீரர்களிற்கு பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -