சம்மாந்துறை கல்வி வலய அதிபர் ஒருவரினால் மூன்று மாணவிகள் பாலியல் சேட்டை -அதிபர் விளக்க மறியலில்

எல்.எம். றியாஸ்-

ம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் அதிபர், தரம் 5ல் கல்வி பயிலும் 10 வயதிற்குட்பட்ட மாணவிகள் மூன்று பேரிடம் பாலியல் சேட்டை செய்த குற்றச்சாட்டின் பேரில் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார். 

இவரின் ஆரம்ப கட்ட விசாரணையை மேற்கொண்ட சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹம்மட். பஸீல் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை குறித்த அதிபரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அத்துடன் குறித்த அதிபரை சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் உதவியுடன் விசேட சட்ட வைத்திய அதிகாரியிடமும் ,மனநல மருத்துவரிடமும் இந்த நபர் தொடர்பான அறிக்கைகளை பெருமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அதிபரை வலயக் கல்விப் பணிப்பாளர் விசாரணை செய்த போது குறித்த அதிபர் மாணவிகள் மூன்று பேரிடமும் பாலியல் சேட்டை செய்ததை குறித்த அதிபர் ஒப்புக்கொண்டிருந்தார்.  இருந்தும் இக் குற்றச் சம்பவம் தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர் சட்டத்தின் முன் நிறுத்த தவறியமை தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -