மைத்திரியின் மகளின் கையொப்பத்தை இட்டவர்கள் விளக்கமறியலில் ..!!



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வியான சத்துரிக்கா சிறிசேனவின் கையொப்பத்தையிட்டு, உதவிக்கோரி வங்கியொன்றுக்கு கடிதமொன்றை அனுப்பி, போலியான ஆவணங்களை தயாரித்ததாகக் கூறப்படும் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு பிரிவினாரால் கைதுசெய்யப்பட்ட வர்த்தகர் மற்றும் அவருடைய தயார் ஆகிய இருவருமே இவ்வாறு எதிர்வரும் 29ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்விருவரும் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில், ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவ்விருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வர்த்தகரான விமுக்தி கரதவ மற்றும் அவருடைய தாயான கமந்தி ரேணுகா ராணஎல்ல ஆகிய இருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -