அகமட் எஸ். முகைடீன்-
தெஹியத்தகண்டி தேசிய பாடசாலை, சூரியபொக்குன இரண்டாம் நிலை பாடசாலை மற்றும் மெதகம இரண்டாம் நிலை பாடசாலை என்பவற்றிக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸினால் கடின பந்து ஆடுகள விரிப்பு வழங்கிவைக்கும் நிகழ்வுகள் நேற்று (10) வெள்ளிக்கிழமை குறித்த பாடசாலைகளில் நடைபெற்றன.
தெஹியத்தகண்டி தேசிய பாடசாலை உதவி அதிபர் புஸ்பகுமார, சூரியபொக்குன இரண்டாம் நிலை பாடசாலை அதிபர் மைத்திரிபால, மெதகம இரண்டாம் நிலை பாடசாலை அதிபர் ஆர்.எம். சயிந்த ஆகியோரின் தமைகளில் வௌ;வேறு நிகழ்வுகளாக நடைபெற்ற இந்நிகழ்வுகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வுகளில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் அம்பாறை மாவட்ட சிங்கள பிரதேசங்களுக்கான இணைப்பாளர் எம்.எஸ்.எம். ரஊப், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெஹியத்தகண்டிய பிரதேச செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பாடசாளைகளில் கடின பந்து கிறிக்கெட் விளையாட்டினை மேம்படுத்தும் வகையில் பெறுமதிவாய்ந்த கடின பந்து ஆடுகள விரிப்புகள் பிரதி அமைச்சரினால் குறித்த பாடசாலை நிர்வாகங்களிடம் கையளிக்கப்பட்டன.