கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் 94ஆம் ஆண்டின் பழைய மாணவர்களின் நிகழ்வு





ஏ.எஸ்.எம்.ஜாவித்-

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் 94ஆம் ஆண்டின் பழைய மாணவர் குழுக்களுக்கிடையிலான உதைபந்தாட்டம் மற்றும் ரகர் விளையாட்டுக்களுக்கான டி சேர்ட் வழங்கும் நிகழ்வு குழுவின் தலைவர் றிபாய் மௌலானா தலைமையில் பாடசாலையின் நீச்சல் தடாக கேட்போர் கூடத்தில் நேற்று மாலை (10) இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் றிஷ்வி மரைக்கார், சிலோன் வின்ஸ் கோல்டிங் தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸவ்ன் கஜசிங்க, மருதானை மக்கள் வங்கி கிளையின் முகாமையாளர் ஷாமரி வீரசிங்க, கல்லூரியின் விளையாட்டுப் பொறுப்பாளர் முஹ்சின் ஆரிப், பழையமாணவர் சங்கத் தலைவர் எம்.யு.எம்.ஆசிம், திட்ட முகாமையாளர் அக்ரம் பாறுக், திட்டச் செயலாளர் றிஸ்வான் உள்ளிட்ட பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அதிதிகளால் போட்டிளில் பங்குபற்றும் அங்கோரா, கோர்டோவா, இஸ்தாம்புல், பக்டாட் ஆகிய கழகப் பொறுப்பாளர்களுக்கும் அவர்களின் அணியினருக்கும் டி சேர்ட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -