காரைதீவு நிருபர் சகா-
சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடந்த திங்களன்று பதவியேற்ற சிரேஸ்ட்ட பொலிஸ் பரிசோதகர்
எம்.கே. இப்னுஅசார் பதவியேற்றகையோடு நேற்று சம்மாந்துறையின் ஒரேயொரு தேசிய பாடசாலையான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய தேசிய கல்லுரிக்கு விஜயம் செய்தார்.
அங்கு கல்லூரி அதிபர் எ.சி.எ.எம். முத்துஇஸ்மாயிலையும் நிருவாகக்குழுவினரையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இப்பிரதேச மக்களின் தேவைகளை பிரச்சினைகளை நிறைவேற்ற 24மணிநேரமும் சேவையாற்ற நான் தயாராகவுள்ள அதேவேளை மாணவர்களின் ஒழுக்கத்திலும் நடத்தையிலும் கவனம் செலுத்தவுள்ளதாகக்குறிப்பிட்டார்.
பொதுமக்களும் பொலிசாரும் இணைந்து பயணிக்கும்போது நீதியும் ஒழுக்கமுமுள்ள சமுதாயத்தை கட்டியெழுப்பமுடியும். இப்பிராந்தியத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையைப்பேணி சீரிய பணியாற்ற மக்களின் ஒத்துழைப்புக் கிடைக்குமென பெரிதும் எதிர்பார்க்கின்றேன் என்றும் அவர் கூறினார்.
பிரதேச மக்கள் மாணவர்கள் பாடசாலை நிருவாகத்தினர் யாராயிருந்தாலும் பிரச்சினை இருந்தால் என்னிடம் வந்து தெரிவிக்கலாம். தக்க நடவடிக்கை எடுக்கக்காத்திருக்கிறேன். என்றுகூறி அனைவரையும் நலம் விசாரித்துச்சென்றார்.
இவ்வாறு சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நேற்று (30) திங்களன்று பதவியேற்ற சிரேஸ்ட்ட பொலிஸ் பரிசோதகர்
எம்.கே. இப்னுஅசார் பதவியேற்றகையோடு இதனைத் தெரிவித்தார்.
இவர் இறுதியாக அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாலமுனையைச்சேர்ந்த இப்னுஅசார் பொலிஸ் சேவையில் பல மட்டங்களிலும்அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களிலும் சேவையாற்றி மூவினமக்களதும்
பேரபிமானத்தைப் பெற்றவராவார்.



